லட்சுமணாஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
உடல் நலம் குறித்த பதிவுகள்
குடும்ப மருத்துவர் என்ற முறையில் பரிந்துரைகள் வழங்கப்படும் .
லட்சுமணாஸ் பரிந்துரைகள் லட்சுமணாஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்படும். லட்சுமணாஸ் பரிந்துரைகள் வழங்க உறுப்பினர்களின் aadhaar எண் அவசியம்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
பரிந்துரைகள் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இங்கு அனைத்து பரிந்துரைகளும் அந்தந்த துறைகளில் உள்ள நிபுணர்களால் வழங்கப்படுவதில்லை. உறுப்பினர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள உறுப்பினர்கள் அவர்களின் அனுபவத்தின் மூலம் அறிந்ததை கொண்டு பரிந்துரைகள் வழங்குவார்கள். மேலும் உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து பரிந்துரைகள் வழங்குவார்கள் . உறுப்பினர்களின் அனுபவம் மூலம் அறிந்ததை பகிர்ந்து கொள்வார்கள். எனவே தகுந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்று எங்கள் பரிந்துரைகளை கடைபிடிக்கவும்./பின்பற்றவும். பரிந்துரைகள் பெற நேரில் வரவேண்டும். பரிந்துரைகள் எழுத்து மூலம் கொடுக்கப்படமாட்டாது. உறுப்பினர்களின் அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் இந்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றது . .உறுப்பினர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் இந்த பரிந்துரைகள் மூலம் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டால் நாங்களோ எங்கள் உறுப்பினர்களோ பொறுப்பேற்க முடியாது. எங்கள் உறுப்பினர்களின் அனுபவம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படுவதால் ,எங்கள் பரிந்துரைகளை நீங்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்..தகுந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்று பின் பற்ற வேண்டும். எனவே இந்த பரிந்துரைகளை பின்பற்றுபவர்கள் நுகர்வோர் நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் மூலம் இழப்பீடு கோர முடியாது.இந்த விதிமுறைகளையும் ,நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் இதில் உறுப்பினராகலாம்
ஒவ்வொரு வருடமும் புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும் .எங்களது பரிந்துரைகளை பின்பற்றாதவர்களுக்கு அடுத்த வருடம் உறுப்பினராக அனுமதி மறுக்கப்படும் .பரிந்துரைகள் எங்கள் அனுபவத்தின் மூலம் சொல்லப்படுகின்றது . இது சிறப்பு மருத்துவர்கள் / வல்லுனர்களின் மூலம் கொடுக்கப்படும் பரிந்துரைகள் அல்ல .சிறப்பு வல்லுனர்களின் ஆலோசனை பெற மற்ற நிறுவனங்களை அணுகவும்
கால அவகாசம்..பரிந்துரைகள் பல உறுப்பினர்களின் அனுபவத்தை கலந்தாலோசித்து சொல்லப்படுவதால் உடனடியாக வழங்கப்படமாட்டாது . பரிந்துரைகள் உடனே கிடைக்காது . சம்பந்தப்பட்டவர்களின் மூலம் பரிந்துரைகள் பெற சில நாட்கள் ஆகலாம் . உடனடி ஆலோசனை பெற மற்ற நிறுவனங்களை அணுகவும் .
பரிந்துரைகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் / நம்பிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது
மேலும் பரிந்துரைகள் எழுத்துபூர்வமாக பரிந்துரைகள் வழங்கப்படமாட்டாது. எனவே உடனடியாக பரிந்துரைகள் / எழுத்துபூர்வமாக பரிந்துரைகள் தேவைப்பட்டால் மற்ற நிறுவனங்களை அணுகவும்.
ஒவ்வொரு துறையிலும் புது புது கண்டுபிடிப்புகள் வருவதால் எங்கள் உறுப்பினர்களின் அனுபவம் போதுமானதாக இருக்காது .எனவே எங்கள் பரிந்துரைகளை அப்படியே ஏற்று கொள்ள வேண்டாம் . எங்களின் பரிந்துரைகளின் மீது உரிய நிபுணர்களின் ஆலோசனை பெற்று கொள்ளவும். எனவே எங்கள் பரிந்துரைகளின் மீது நஷ்ட ஈடு கோர முடியாது.பரிந்துரைகள் பல உறுப்பினர்களின் அனுபவத்தை கலந்தாலோசித்து சொல்லப்படுவதால் அந்ததந்த துறைகளின் வல்லுனர்களின் கருத்துக்களை கலந்தலோசித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உறுப்பினராக சேர ஆதார் எண் அவசியம் . விதிமுறைகளை மீறினால் எந்த நேரமும் நிர்வாகிகள் உறுப்பினரை விலக்கும் அதிகாரம் உண்டு
அவசர சிகிச்சை அளிக்க இங்கு வசதிகள் கிடையாது .
உணவு பதிவேடு-உறுப்பினர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு பற்றி பதிவு செய்ய வேண்டும்.பல நோய்களுக்கு உணவு பழக்க வழக்கங்களே காரணமாக உள்ளது.பல உடல் நல கோளாறுகளுக்கு உணவே காரணமாக இருப்பதால் உறுப்பினர்கள் தங்கள் உணவு முறையை பதிவு செய்ய வேண்டும் .உணவு குறித்த பரிந்துரைகளை பின்பற்றாதவர்கள் அடுத்த வருட உறுப்பினராக அனுமதி மறுக்கப்படும்
உடல் நல பரிசோதனை
உடல் நல பரிசோதனை வருடம் ஒருமுறையாவது செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முயற்சிகள் .புற்று நோய் வராமல் தடுக்க பரிந்துரைகள் . வருடத்திற்கு ஒரு முறையாவது புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது புற்று நோய் இருந்தால் ஒரு சில பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்
தடுப்பூசிகள் பற்றிய பரிந்துரைகள்-சந்தையில் உள்ள ஒவ்வொரு தடுப்பூசியும் எல்லா குழந்தைகளுக்கும் தேவைப்படாது (Optional vaccines). ஒவ்வொரு குழந்தையின் உடல் நிலைக்கேற்ப சில தடுப்பூசிகள் தேவைப்படலாம் . சில குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை போடவே கூடாது.(Contraindications) எனவே தடுப்பூசிகள் போடும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. 100 சதவீத தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு .எனவே தேவை இல்லாத தடுப்பூசிகள் போட்டு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டாம்.ஏதாவது ஒரு தடுப்பூசியை போட முடிவு செய்தால் எங்களுக்கு தெரிவித்து கருத்தை கேட்டபின் முடிவெடுங்கள். அந்த தடுப்பூசியை போட்டவர்களுக்கு எதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டு இருந்தால் உங்களுக்கு தெரிவிப்போம் . அந்த தடுபபூசி போடுவதா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..அந்த தடுப்பூசி போடாமல் இருந்து அந்த கிருமி தாக்கும் வாய்ப்பு இருக்கலாம் .எனவே இது குறித்து உறுப்பினர்களே முடிவு எடுத்து கொள்ள வேண்டும்..எந்த ஒரு தடுப்பூசியும் நூறு சதவீதம் ( 100% ) நோயை தடுப்பதில்லை .அதே போல் எந்த ஒரு தடுப்பூசிக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை . 100% தடுப்பூசிகளுக்கும் எதாவது பக்க விளைவுகள் இருக்கும்.
தடுப்பூசிகள் பற்றிய உண்மை தகவல்கள் தெரிவிக்கப்படும் .ஒவ்வொரு தடுப்பூசியின் உபயோகம் மற்றும் பக்க விளைவுகள் பற்றித்தெரிவிக்கப்படும் . அந்த தடுப்பூசியை போடுவதா வேண்டாமா என்று உறுப்பினர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும் . அந்த தடுப்பூசி போடுவதாலோ ,போடாததாலோ உண்டாகும் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் . எனவே இந்த பரிந்துரைகளை பின்பற்றுவதால் உண்டாகும் விளைவுகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் மூலம் இழப்பீடு கோர முடியாது .பரிந்துரைகளை பின்பற்றாதவர்கள் அடுத்த வருட உறுப்பினராக அனுமதி மறுக்கப்படும்
எங்களது பரிந்துரைகள் மீது ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவை கோவை அதிகார எல்லைக்குட்பட்டது
மேலும் லட்சுமணாஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு www.lakshmanas.com நான் லட்சுமணாஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்அனைத்தையும் வலைதளம் www.lakshmanas.com மூலம் தெரிந்து கொண்டேன் . இவை அனைத்தையும் ஒத்துக்கொண்டேன் .கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகின்றேன்